டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட ஒன்றிய அரசு பரிசீலனை: அண்ணாமலை தகவல்!

2 months ago 11

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து, ஒன்றிய அரசு பரிசீலிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

இதற்கு கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட ஒன்றிய அரசு பரிசீலனை: அண்ணாமலை தகவல்! appeared first on Dinakaran.

Read Entire Article