ஜெயங்கொண்டம், பிப் 27: ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜா பணி மாறுதல் பெற்று திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அரியலூர் குற்றப்பதிவேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேந்திரன் ஜெயங்கொண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்டப்டார். இதையடுத்து ராஜேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
The post ஜெயங்கொண்டம் காவல்நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பதவியேற்பு appeared first on Dinakaran.