தாம்பரம்: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள் கலந்துக் கொள்வார்கள் என பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி, மாநில தலைவர் தீனதயாள், மாநில பொருளாளர் ருக்மாங்கதன் ஆகியோரின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருச்சியில் கூடிய ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் 04.02.2025 அன்று எடுக்கப்பட்ட முடிவின் படி 10 அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14.02.25 வெள்ளிக்கிழமை வட்டார அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டத்தை மிகுந்த எழுச்சியாக நடத்துவது, அதனை தொடர்ந்து வருகிற 25. 02. 2025 செவ்வாய்க்கிழமை மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.