சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு பாதுகாப்பு பணியில் 16,500 காவலர்கள்: காவல்துறை அறிவிப்பு

1 week ago 8

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னை பெருநகரில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் கொண்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த செப்.7ம் தேதியன்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னை பெருநகரில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன.

Read Entire Article