சென்னையில் நள்ளிரவு பரவலாக மழை

2 hours ago 3

சென்னை,

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, மடிப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயில், போரூர் என நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Read Entire Article