*நண்பர்கள் வெறிச்செயல்
திருமலை : சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவியை அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் பயோமெடிக்கல் படிக்கும் இறுதியாண்டு மாணவி. இவரது நண்பர் அஜய்.
இந்நிலையில், அஜய் மாணவிக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி தெலங்கானா மாநிலம், ஐதராபாத்திற்கு அழைத்து சென்றார். பயிற்சிக்காக சென்ற மாணவி குகட்பள்ளியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.
அப்போது அஜய், தனது நண்பரான ஹரி என்பவர் இருவரையும் விருந்துக்கு அழைத்திருப்பதாக கூறி மாணவியை அழைத்து சென்றார். நிஜாம்பேட்டையில் உள்ள ஹரியின் பிளாட்டுக்கு மாணவி சென்றதும் அஜய்யும், ஹரியும் மாணவியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர்.
இதையடுத்து மாணவி போதையில் இருந்தபோது இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பச்சுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவியை அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.