சூரிய சக்தி, அணுசக்தி, நீர்மின்சக்தியில் இந்தியா கவனம் செலுத்துகிறது - பிரதமர் மோடி..!

3 days ago 6
சோலார், காற்றாலை, அணுசக்தி உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசிய அவர், 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். வீட்டின் மேற்கூரையில் சோலார் தகடுகள் பொருத்தும் பிரதமரின் சூர்யா கர் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீடும் மின் உற்பத்தி செய்யும் இடமாக மாற உள்ளதாக கூறினார்.
Read Entire Article