சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி

4 hours ago 3

திருப்பூர், பிப்.27: மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, சென்னை மாவட்ட தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை மற்றும் திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆகியவை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று நடந்தது.

இதில் மாவட்டத்தில் உள்ள 60 அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் வெவ்வேறு குழுக்களாக கலந்து கொண்டு திணை போன்ற ஆரோக்கிய உணவுகள், ஆற்றல் சேமிப்பு அளவீடுகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்க்கு மாற்று, கழிவிலிருந்து செல்வம், காலநிலை மாற்றத் தாக்கங்களின் கணிப்பு நடவடிக்கைகள், தோட்டம் அமைத்தல், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பசுமை வாழ்க்கை முறை, மாசுபாடுகளை களைதல் போன்ற கருத்துக்களை மையப்படுத்தி தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வில் மாசு கட்டுப்பாட்டு வாரிய திருப்பூர் வடக்கு உதவி செயற்பொறியாளர் திப்புசுல்தான் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கண்காட்சி துவக்கி வைத்திருந்தார். கண்காட்சியை பல்வேறு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த குழுவினர் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 2ஆம் பரிசாக 8000 ருபாய், மூன்றாம் பரிசாக முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 7000 ரூபாயும் பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பெல்லம்பட்டி மற்றும் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளிகள் சிறப்பு பரிசாக தலா 5,000 ரூபாய் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் மாவட்ட வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

The post சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி appeared first on Dinakaran.

Read Entire Article