சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

2 days ago 4

சுசீந்திரம்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாத திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழா தாணுமாலய சாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாளுக்கும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சிறப்பு தீபாராதனை மற்றும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது.

9-ம் திருவிழாவான நேற்று தோரோட்டம் நடந்தது. விழாவில் நேற்று மாலை 5.40 மணியளவில் இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் எழுந்தருளினர். நிகழ்ச்சியில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.   

Read Entire Article