சிம்பு, நயன்தாரா டிவிட்டர் பக்கம் திடீர் முடக்கம்

6 days ago 4

சென்னை: நடிகர், நடிகைகள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் தீவிர ஈடுபாடு காட்டுகின்றனர். தங்களைப் பற்றிய எந்த அப்டேட்டாக இருந்தாலும் அதில் பதிவிடுகின்றனர். சமூக வலைத்தளமே வேண்டாம் என ஒதுங்கியிருந்த நயன்தாரா கூட சில மாதங்களுக்கு முன் டிவிட்டர் கணக்கை தொடங்கினார். பின்னர் இன்ஸ்டாகிராமிலும் வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் சிம்புவின் டிவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நயன்தாராவின் டிவிட்டர் கணக்கும் முடங்கியது. இதையடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்களது தரப்பு வெளியிட்ட பதிவில், ‘திடீரென டிவிட்டர் பக்கம் முடங்கியுள்ளது. சிலர் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளனர். அதனால் புதிய பதிவுகளை நம்ப வேண்டாம். தொழில்நுட்ப டீமிடம் இதை சரிசெய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றனர். இந்நிலையில் மாலையில் இவர்களது டிவிட்டர் பக்கம் சரிசெய்யப்பட்டது.

The post சிம்பு, நயன்தாரா டிவிட்டர் பக்கம் திடீர் முடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article