'சார்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு

2 days ago 5

சென்னை,

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர்.

நடிகர் விமல் பசங்க, களவாணி, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக போகுமிடம் வெகு தூரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் ஒரு சில காரணத்தினால் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அடுத்ததாக இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகின்ற 18ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our excitement is growing! The trailer of our movie #SIR, will be released by Director @Dir_Lokesh❤️Trailer from tomorrow at 11 AM Produced: @pictures_sss @sirajsfocussDirector: @DirectorBosePresented by : #vetrimaaran @GrassRootFilmCo pic.twitter.com/Uxmr2ZwsMe

— Actor Vemal (@ActorVemal) September 17, 2024
Read Entire Article