சாம்பியன்ஸ் டிராபி: ரோகித் சர்மாவுக்கு காயம்..நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா ?

3 hours ago 2

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.இதில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் , இந்திய அணி தனது கடைசி லீக்கில் வருகிற 2-ந்தேதி நியூசிலாந்தை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆடுவது சந்தேகமாகியுள்ளது. சக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோகித் சர்மா பயிற்சியை தவிர்த்துள்ளார். அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

Read Entire Article