சாம்பியன்ஸ் டிராபி: இந்த அணிதான் கோப்பையை வெல்லும் - பாக்.முன்னாள் வீரர் கணிப்பு

2 hours ago 1

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், தனது 2 ஆட்டங்களிலும் தோற்று பரிதாபமாக வெளியேறியது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கணித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இறுதிப்போட்டி லாகூரில் நடைபெறும் என்று நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் இப்படி விளையாடும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருவேளை இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதினால் அது டி20 உலகக்கோப்பை போன்று நன்றாக இருக்கும்" என்று கூறினார். 

Read Entire Article