விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேசியதாவது: விழுப்புரத்தில் வரும் 29ம்தேதி நடைபெறும் அரசு விழாவில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்காக அச்சிடப்படும் அழைப்பிதழில் பாமக தலைவர் அன்புமணி பெயரும் இடம்பெறும். மேலும் 21 சமூக நீதிப் போராளிகளின் குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
The post ‘சமூக நீதி போராளிகள் விழா ராமதாசுக்கு நேரில் அழைப்பு’ appeared first on Dinakaran.