"சப்தம்" மேக்கிங் வீடியோ வெளியீடு!

3 hours ago 1

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து 'சபதம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

இந்த படத்தில் ஆதி, ரூபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பேய்களை பற்றி தெரிந்துகொள்ளும் புலனாய்வாளராக நடித்திருக்கிறார். இதில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார். ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமன் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடலான 'மாயா மாயா' கடந்த வாரம் வெளியானது. ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

#Sabdham making video is out nowhttps://t.co/tIXGkwjtukFilm in theatres from tomorrow !! pic.twitter.com/ffQMuPiv1I

— AmuthaBharathi (@CinemaWithAB) February 27, 2025

நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள சப்தம் படத்தின் மேக்கிங் வீடியோ படக்குழுவினரால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

#SabdhamFromFeb28 tat is From TOMORROW Enjoy this Ride From The Brilliant @dirarivazhagan pic.twitter.com/LtnoRrql5c

— thaman S (@MusicThaman) February 27, 2025
Read Entire Article