சந்தன கடத்தல் வீரப்பன் உறவினர் அர்ஜுனன் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

3 months ago 16

சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸாரால் விசாரணக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதனிடையே தருமபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருத்த வழக்கில் அவர் இறந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் அர்ஜுனனின் மகன் சதிஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Read Entire Article