
சென்னை,
'மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி 'பரிதாபங்கள்' என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டு பரவலான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர். தற்போது இந்த யூடியூப் சேனலை 6 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பொது மக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து, 'ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். அந்தப் படத்தை கைவிட்டவர்கள் புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.