குழந்தையுடன் உணவு டெலிவரி!

2 hours ago 1

வேலையில்லா பலருக்கும் வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது இந்த உணவு டெலிவரி வேலை. மக்கள் அதிகம் வெளிப்புற உணவுகளை வீட்டில் சாப்பிட ஆசைப்படுவதன் காரணம் இந்த உணவு டோர்டெலிவரி பிஸினஸ் தினம் தினம் புது உயரத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது படித்துவிட்டு அல்லது படிக்கும் போதே பகுதி நேரமாக என ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த வேலையில் ஆர்வத்துடன் சேர்கிறார்கள். அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த பெண் ஒருவர் வேலை கிடைக்காத நிலையில், தனது கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்து வருகிறார், அவரது வீடியோ எங்கும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ராஜ்கோட்டைச் சேர்ந்த இவர் தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உணவை டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் பேசுகையில் ‘ இந்த வேலையை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துள்ளேன். ஆனால், திருமணமான பிறகு எனக்கு எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனங்களாக வேலை கேட்டு ஏறி இறங்கினேன். குழந்தை இருப்பதை காரணமாகக் கூறி வேலை கொடுக்க மறுத்து வந்தனர். அதன் பிறகு தான் குழந்தையுடன் செல்லக்கூடிய வேலை எது என தேடியதில் இந்த உணவு டெலிவரி வேலை எனக்குக் கிடைத்தது. வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதாவதொரு வேலை அவசியம் என்பதால் இந்த வேலையை செய்து வருகிறேன். ஆரம்பித்த புதிதில் மிகவும் கடினமாகத்தான் தோன்றியது. ஆனால், இப்போது பழகிவிட்டது. எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்’ இவரது வீடியோவில் பலரும் பிரதமர் நரேந்திர மோடியையும் டாக் செய்து கேள்விகள் கேட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
– கவின்.

The post குழந்தையுடன் உணவு டெலிவரி! appeared first on Dinakaran.

Read Entire Article