குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

1 week ago 8

 

காரமடை, செப். 14: கோவை மாவட்டம் முழுவதும் குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 800, 1500, 3000 மீ. ஓட்டம், குண்டு எறிதல், வட்டி எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.

இதில், காரமடையை அடுத்துள்ள புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் உதயசங்கர், சிபி ராகவன், ஸ்ரீ ஹரிஹரன், ராகுல் பிரசாத், பரமகுரு, மனோஜ் குமார், தேவநாதன், சங்கீதா, கோகிலா உள்ளிட்ட 9 மாணவர்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2ம், 3ம் பரிசுகளை பெற்று சாதனை படைத்தனர். குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராதிகா, மூர்த்தி, தினேஷ் உள்ளிட்டோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி மற்றும் உறுப்பினர்கள் நேற்று சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

The post குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article