
ராஞ்சி,
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அதே போல் கும்பமேளாவிற்கு சென்று புனித நீராடிவிட்டு வீடு திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஜார்கண்ட் ஹசாரிபாக் மாவட்டத்திற்கு காலை 6.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது காருக்கு முன் பைக் ஒன்று வந்துள்ளது. அதில் மோதாமல் தவிர்க்க டிரைவர் காரை திருப்பியபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை ஹசாரிபாக்கில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.