குளித்தலை : குளித்தலை அருகே குட்டப்பட்டியில் பத்தாம் ஆண்டு எல்கைப்பந்தயபோட்டியில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குட்டப்பட்டி, கீழ குட்டப்பட்டி, புதுப்பாளையம் எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு, எழுநூற்று மங்கலம், மேல குட்டப்பட்டி ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தயம், குளித்தலை –மணப்பாறை சாலை குட்டப்பட்டியில் நடைபெற்றது.
இந்த எல்கை பந்தயத்தில் பெரிய குதிரை, ரெட்டை மாடு, சிறிய குதிரை, பெரிய ஒத்தை மாடு, புதிய குதிரை சிறிய ஒத்தை மாடு, சைக்கிள் கட்ட பிட்டிங், 1500 ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு பந்தயங்கள் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, கரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர் தஞ்சாவூர் தேனி சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு, குதிரை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 10 மைல் தூரம் பெரிய குதிரை பந்தயத்தில் சென்னை ஓம் சரவணபவ பாண்டியன் முதல் பரிசு, கோவை சமயபுரம் நவீன் பிரதர்ஸ் இரண்டாம் பரிசு, கோவை பன்னாரி அம்மன் துணை டர்லி குரூப்ஸ் மூன்றாம் இடம் பெற்றனர்.
ரெட்டை மாடு 8 மைல் தூர போட்டியில் கோவை மருதமலை முருகன் முதல் பரிசு, தேனி ஓடைப்பட்டி தொப்பி மணி இரண்டாம் பரிசு, திருமேனி கே ஆர் பிரசன்னா குட்டி பிரபா மூன்றாம் பரிசு வென்றனர். அதேபோல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post குட்டப்பட்டியில் 10ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தய போட்டி appeared first on Dinakaran.