குஜராத்: ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

5 days ago 5

ஆமதாபாத்,

பிரதமர் மோடியின் ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசாவுக்கான 3 நாள் சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது. இதன்படி, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார். எனினும், தொடர் கனமழையால் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த வாகன பேரணி ரத்து செய்யப்பட்டது.

எனினும் அவர், ஜார்க்கண்டில் 6 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான சேவையை தொடங்கி வைத்து உள்ளார். இதன்பின்னர், காணொலி காட்சி வழியே பொதுமக்களுக்கு அவர் உரையாற்றினார். பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இதன்பின்னர், குஜராத்தில் உள்ள ஆமதாபாத் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

அவரை ஆமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் கவர்னர் ஆச்சாரியா தேவவிரத், முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் நேற்று மாலை வரவேற்றனர். இதனை தொடர்ந்து காந்திநகர் மற்றும் ஆமதாபாத் நகரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதில் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதுடன், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.

இதன்பின் மகாத்மா மந்திரில் நடைபெறும் கண்காட்சியிலும் அவர் பங்கேற்கிறார். அவர் இன்று மதியம் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். எரிசக்தி, சாலைகள், வீட்டு வசதி துறை உள்ளிட்ட திட்ட பணிகள் இதில் அடங்கும்.

Read Entire Article