காவல்துறையில் பெண்கள் போலீஸ் அகாடமியில் இன்று தேசிய மாநாடு தொடங்குகிறது: நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

4 hours ago 2

சென்னை: காவல் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் 11வது 2 நாள் தேசிய மாநாடு ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இன்று தொடங்குகிறது. மாநாட்டை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைக்கிறார்.

பெண் காவலர்களை கவுரவிக்கும் வகையில் 11வது தேசிய மாநாடு இன்று மற்றும் நாளை மறுநாள் வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடக்கிறது. இந்த மாநாட்டை காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்கை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பல்ேவறு மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பெண் காவல் அமைப்புகளுக்கு இடையிலான உரையாடல், கலந்தரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு தேசிய தளத்தை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 140 மகளிர் காவல் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநாடடின் கருப்பொருள் ‘பெண் காவல்துறை மற்றும் அதிகாரமளித்தல்’. மாநாட்டை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்தயிானந்த் ராய் தொடங்கி வைக்கிறார். மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் அமைப்பை சேர்ந்த ஒரு பெண் பிரதிநிதி சிறந்த சாதனைகளுக்காக கவுரவிக்கப்படுவார்.
பல்வேறு தலைப்புகளில் குளோபல் எச்சிஎல் நிறுவனம் சார்பில் ஸ்ரீமதி, திரைப்பட நடிகை ரோகிணி, டாக்டர் ராமசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் பி.எம்.நாயர், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

The post காவல்துறையில் பெண்கள் போலீஸ் அகாடமியில் இன்று தேசிய மாநாடு தொடங்குகிறது: நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article