காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க தடை: சுற்றுச்சூழல் அமைச்சர் அறிக்கை

1 week ago 11


டெல்லி: டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பாட்டை கட்டுப்படுத்த பட்டாசு வெடிக்க, விற்க தடை விதித்து சுற்றுச்சூழல் அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசு அதிகளவில் இருப்பதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி காலங்களில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ெடல்லி அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் ெடல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லியில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கும் பொருந்தும்.

இந்த தடை உத்தரவைக் கடுமையாக பின்பற்ற ெடல்லி காவல்துறை, டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை ஆகியோருடன் இணைந்து செயல் திட்டங்கள் வகுக்கப்படும். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 21 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ெடல்லி அரசின் குளிர்கால நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பட்டாசுகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றிற்கான தடை வருகிற ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க தடை: சுற்றுச்சூழல் அமைச்சர் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article