காமிக்ஸ் வடிவில் வெளியான "ரெட்ரோ" படப்பிடிப்பு காட்சிகள்

3 months ago 14

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.

இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது. ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் டி சீரிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற14-ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை படக்குழு காமிக்ஸ் வடிவில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

Kicking Off "#Retro" in Style with the #RetroBTSComic!Forget the usual pooja ceremony or predictable promo videos—Karthik Subbaraj wanted something totally unique. So, the team went all out and shot a single, high-impact scene to announce Retro. No fluff, just pure cinematic… pic.twitter.com/v4capJUfQf

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 10, 2025

"ரெட்ரோ படத்தின் அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்ட போது சந்தோஷ் நாராயணன் 'கல்கி 2898ஏடி' படத்தில் பிசியாக இருந்தாலும் 'ரெட்ரோ' படத்திற்காக நேரம் ஒதுக்கி அதற்கான தீம் மியூசிக்கை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் தயார் செய்து கொடுத்தார். அதே சமயம் அந்தமானில் இதை படமாக்கும் போது வானிலை சரியாக ஒத்துழைக்கவில்லை. ஆனால் படக்குழு பின்வாங்கவில்லை. சூர்யாவும் தீயான லுக்கை காட்டி ஒரே சாட்டில் முடித்துக் கொடுத்தார்" என்று தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Santhosh Narayanan: The Speedster!Busy with Kalki 2898 AD? No problem! SaNa still made time for Retro because, well, it's Suriya + Karthik Subbaraj! He got the file at 3 PM, cooked up a killer retro theme in record time, and delivered it by 5 PM. Talk about a musical beast!… pic.twitter.com/CzbITIDC06

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 10, 2025
Read Entire Article