கடலூரில் பைக்-பஸ் மோதி விபத்து... ஒருவர் பலி, 3 மாணவிகள் படுகாயம்

3 months ago 15

கடலூர்,

கடலூர் மாவட்டம் கேசவன்நாயகபுரம் பகுதியியைச் சேர்ந்த 3 மாணவிகள் குறிஞ்சிப்பாடியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்ல பஸ் நிலையத்தில் இன்று காலை நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாங்கள் குறிஞ்சிப்பாடி செல்வதாகவும் எங்களின் வாகனத்தில் வரலாம எனவும் மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரே பைக்கில் 5 பேர் சென்றுள்ளனர். இதனிடையே பெரம்பூர் சென்று கொண்டிருந்த பஸ், முன்னால் கரும்பு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த டிராக்டரை முந்த முயற்சிசெய்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக பஸ், மாணவிகள் சென்ற பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் அனைவரும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயம் அடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article