ஓசூர், பிப்.8: பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக, கடத்த கடத்திய 314 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 314 கிலோ குட்கா மூட்டைள் மற்றும் 48 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ₹1 லட்சத்து 38 ஆயிரத்து 120 ஆகும். குட்கா, மதுபாக்கெட் ஆகியவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா தேவஸ்தானம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (37), என்பதும், பெங்களூரு நகரில் இருந்து திருச்சிக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post ஓசூர் வழியாக காரில் கடத்திய 314 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.