
சென்னை,
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
"யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாசாரம் இருக்கிறது, மொழி இருக்கிறது. அதுதான் எங்கள் அடையாளம்.
எங்கள் தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ்த்தாய்தான், தமிழ்மொழி தான். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொழிக்கு எவ்வளவு வலிமை இருந்து இருக்கும். அப்படிபட்ட மொழி இன்று தமிழக முதல்-அமைச்சரின் பார்வையில் உள்ளது. என்ன நடந்தாலும் சரி, மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று அவர் சொன்னது தமிழக மக்களை நெகிழவைத்து விட்டது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். வெற்றி திருமகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க. வெல்லும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.