
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
இந்த போட்டி தொடருக்கு தயாராகுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் கட்ட பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் உயர் செயல்திறன் மையத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த நிலையில் பயிற்சியில் கலந்து கொள்ள முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.