ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா வெற்றி

2 hours ago 4

திருவனந்தபுரம்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று கேரளாவில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கேரளா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேரளா அணியில் நோவா சதாவுய், பெப்ரா ஆகியோர் கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணியில் விஷ்ணு கோல் அடித்தார் .

Read Entire Article