எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேருக்கு 4வது முறை காவல் நீட்டிப்பு

1 week ago 11

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்குச் சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 35 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்றுடன் இவர்களுக்கான நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து 35 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா, மீனவர்கள் 35 பேருக்கும் செப்.18-ம் தேதி வரை நான்காவது முறையாக நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேருக்கு 4வது முறை காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article