எம்எல்ஏ வழங்கினார் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம்

1 week ago 10

 

குளித்தலை செப்.11: கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் மற்றும் விலங்கியல் துறை சார்பாக இயற்கை பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம நடைபெற்றது. டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரி கல்லூரி முதல்வர்(பொ) முனைவர். அன்பரசு தலைமை வகித்து, பேசினார். விலங்கியல் துறை தலைவர் (பொ) முனைவர் ரெங்கநாதன் அனைவரையும் வரவேற்றார்.

கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூரைச் சேர்ந்த வானம் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் பொறியாளர் ஜெகனாதன் சுற்றுச்சூழல் ஆர்வலர் முனைவர் குணசேகரன் சிறப்புரை கருத்தரங்கின் முடிவில் தாவரவியல் துறை தலைவர்(பொ) முனைவர் மகேந்திரன் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் இருவரும் இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், காற்று ஆகியவற்றை இன்றைய சூழலில் எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறு வளப்படுத்துவது அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு நம் கொண்டு செல்வது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். ஏற்பாடுகளை தாவரவியல் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

The post எம்எல்ஏ வழங்கினார் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article