உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் மீட்பு: செல்போனில் பேசி நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

4 days ago 5

சென்னை / கடலூர்: உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 18 ஆண்கள், 12 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு கடந்த 1-ம் தேதி ஆன்மிக சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தால் அவர்கள் உத்தராகண்ட் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. ஆதிகைலாஷ் கோயிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, வழியில் ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு ஆசிரம பகுதியில் 30 பேரும் பாதுகாப்பாக தங்கினர்.நிலச்சரிவால் சாலை பாதிக்கப்பட்டதால், 6 நாட்களாக அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். போதிய உணவு, வாகனத்துக்கான எரிபொருள் வசதி இல்லாததால் 30 பேரும் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்களில், சிதம்பரத்தை சேர்ந்த ரவிசங்கர் - வசந்தா தம்பதி, சிதம்பரத்தில் உள்ள தங்களது மகன் ராஜனை கடந்த 14-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதுபற்றி தகவலறிந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமாரிடம் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

Read Entire Article