இஸ்ரேல் தாக்குதல்: 6 ஐ.நா. பணியாளா்கள் உயிரிழப்பு

1 week ago 6

காசா,

மத்திய காசா பகுதியில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) நடத்திவரும் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், அந்த அமைப்பின் 6 ஊழியா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் ஐ.நா. பணியாளா்கள் உள்பட மொத்தம் 18 போ் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியது. இந்தத் தாக்குதல், நுசீரத் பகுதி அகதிகள் முகாமில் உள்ள அல்-ஜொனி பள்ளியில் புதன்கிழமை நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

அந்தப் பள்ளியிலிருந்து தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுவந்த 'பயங்கரவாதிகள்' மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த நடவடிக்கையின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இது குறித்து யுஎன்ஆா்டபிள்யுஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த அக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போா் தொடங்கியதில் இருந்து, ஒரே தாக்குதலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தங்கள் பணியாளா்கள் உயிரிழந்தது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 11 மாதங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி கட்டடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது 5 முறை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, காசாவின் மத்தியப் பகுதியில் அகதிகள் முகாம் அமைத்து யுஎன்ஆா்டபிள்யுஏ நடத்திவரும் அல்-சா்தி பள்ளியில் இஸ்ரேல் கடந்த ஜூலை மாதம் நடத்திய தாக்குதலில் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article