“இபிஎஸ் நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை; என் உணர்வுகளையே வெளிப்படுத்தினேன்” - செங்கோட்டையன் விளக்கம்

3 months ago 12

ஈரோடு: “அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றங்களை நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைப்பதை மறுபரீசிலனை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று (பிப்.10) மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவில் நீங்கள் பங்கேற்காதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Read Entire Article