இபிஎஃப்ஓ அலுவலகம் நடத்தும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்: 4 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது

2 hours ago 1

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் இன்று (27-ம் தேதி) நடைபெறுகிறது.

இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

Read Entire Article