இன்று மாலை வெளியாகிறது 'தளபதி69' படத்தின் அப்டேட்

6 days ago 6

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் தி கோட். இப்ப்டம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இப்படத்தை, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக அதிகாரபூரவ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று மாலை அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளதாக பிரபல தயாரிப்பு நிறுவனமாக கே.வி.என் அறிவித்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Read Entire Article