இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் முயற்சி வெற்றி பெறாது: மோகன் பகவத்

1 week ago 7

புனே,

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

இந்து என்ற சொல், பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதை குறிக்கும். உலகமே ஒரு குடும்பம் என்ற நோக்கத்தை இந்தியா முன்வைக்கிறது. முந்தைய காலத்தில் அந்நிய படையெடுப்பு வெளிப்படையாக தெரிந்ததால் மக்கள் உஷாராக இருந்தனர். ஆனால், தற்போது வேறு வகைகளில் பிரசாரம் செய்கின்றனர். இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பொருளாதாரம், ஆன்மிகம் மற்றும் அரசியல் ரீதியில் நம்மை சீரழிக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவின் முன்னேற்ற பாதையில் சில சக்திகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. சர்வதேச அரங்கில் நமது எழுச்சியை கண்டு பயப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்

சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலத்தில் இந்தியாவின் எழுச்சிக்கான நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதேபோன்ற நிலை தற்போதும் நிலவுவதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலத்தில் தர்மம் மற்றும் நீதியின் சக்தியைப் பயன்படுத்தி சமாளிக்கப்பட்டது. இந்தியாவை வரையறுக்கக்கூடியதாக 'ஜீவனி சக்தி' என்ற ஒரு காரணி உள்ளது. ஜீவனி சக்தி நமது தேசத்தின் அடிப்படை. அது எப்போதும் இருக்கும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. 'சிருஷ்டி' தொடங்கும்போது தர்மம் இருந்தது. இறுதி வரை அது தேவைப்படும். முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி ஏற்படாமல் இருந்திருந்தால், அனைத்து வேறுபாடுகளையும் மீறி நாடு இன்னும் ஒற்றுமையாக இருந்திருக்கும்"இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article