இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ : 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

15 hours ago 3

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனிடையே சனிக்கிழமை இரவு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழல் நிலவியது.

இந்த நிலையில், இன்று ஆபரேஷன் கெல்லர் என்ற தீவிரவாதிகளை தேடி அழிக்கும் வேட்டையை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் ஷூகல் கெல்லர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் ஷோபியானின் சோதிபுரா ஹிர்போராவைச் சேர்ந்த ஏ பிரிவு தீவிரவாதி ஷாஹீத் குட்டே ஆவார். மற்றொருவர் அட்னான் ஷாபி தார், ஷோபியானின் வண்டுனா மெல்ஹோராவைச் சேர்ந்த சி பிரிவு தீவிரவாதி ஆவார்.

The post இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ : 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.

Read Entire Article