இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைந்த புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்

6 days ago 6

சென்னை,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடர் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் பரிந்துரைப்படி மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவர் இலங்கை தொடரில் இந்திய அணியுடன் இணையவில்லை.

இந்திய அணி தற்போது வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் இந்திய அணியுடன் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

The countdown starts as #TeamIndia begin their preps for an exciting home season.#INDvBAN pic.twitter.com/VlIvau5AfD

— BCCI (@BCCI) September 13, 2024
Read Entire Article