சென்னை: “சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே நாம் இந்தித் திணிப்பை எதிர்கிறோம்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி என்ற முகமூடிக்கு பின்னால் சமஸ்கிருதத்தின் முகம் இருப்பதாக விமர்சித்து மொழிப் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மூன்றாவது மடல் என்று குறிப்பிட்டு திமுகவின் அதிகாரபூர்வ இதழில் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: