ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு... தென் ஆப்பிரிக்கா 106 ரன்களில் ஆல் அவுட்

1 day ago 4

ஷார்ஜா,

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்கரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் ஓவர் முதலே ஆப்கானிஸ்தான் அணி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஹென்ட்ரிக்ஸ் 9 ரன், டோனி டி ஜோர்ஜி 11 ரன், அடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 2 ரன், கைல் வெர்ரையன் 10 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பெக்லுக்வோயா மற்றும் ஜேசம் ஸ்மித் ஆகியோர் ரன் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ஜோர்ன் பார்டுயின் மற்றும் வியான் முல்டர் இணைந்து நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் ஜோர்ன் பார்டுயின் 16 ரன்னிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக வியான் முல்டர் 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 4 விக்கெட்டும், அல்லா கசன்பர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடி வருகிறது.

Read Entire Article