கந்தர்வகோட்டை, மே 12: புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் உள்ள அன்ன சத்திரத்தையும், 7 ஏக்கர் பரப்பில் உள்ள குளத்தையும் சீரமைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு சோழர்களும், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பாண்டியர்கள், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு சேரர்கள் ஆண்டு வந்தனர். அதுமட்டுமின்றி, ஏராளமான குறுநிலமன்னர்களும் சிறு நிலப்பரப்பை ஆட்சி செய்து வந்தனர். அதில், சோழமன்னர்கள் சோறும், நீரும் விற்பனைக்கில்லை என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, கிராமங்கள்தோறும் தண்ணீர் பந்தல்களை அமைத்தும், வழிபோக்கர்கள் இளைப்பாற அன்ன சத்திரங்களை அமைத்து மக்களுக்கு சோறும், நீரும் இலவசமாக கிடைக்கச் செய்தனர். மேலும், வேளாண் தொழிலை மேம்படுத்த கிராங்களின் வீதிகளில் வழிந்தோடும் மழைநீர் ஊருக்கு மையத்தில் உள்ள குளத்திற்கும், குளம் நிரம்பிய நீர், வேளாண் நிலங்கள், வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் நீர் சேகரமாகும் வகையில் ஊருக்கு ஓரமாக ஏரி அமைத்தனர்.
மேலும், மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உலகிற்கே உணர்த்தியதுடன், கட்டிடக்கலையையும் பார்போற்றும் வகையில் கல்லணையைக் கட்டி கரிகால சோழன் பறைசாற்றினார். அந்த வகையில், ஏரி, குளங்கள் மக்களின் குடிநீர் ஆதாரத்தையுடம், பாசன நீர்வளைத்தையும் மேம்படுத்தி, சுற்றுச் சூழலைப் பாதுகாத்தன. நகரமயமாக்களால் நாளடைவில் வரத்துவாய்க்கால், ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி நீராதாரத்தை இழந்துள்ளன.
அதில், புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் 7 ஏக்கர் பரப்பில் உள்ள சத்திரகுளம் மழை காலங்களில் நீர்வரத்து பாதையும் குளம் நிரம்பியவுடன் வடிகால் வசதியும் கொண்டு பண்டைய காலத்தில் அமைக்கபட்டுள்ளது. குளத்தில் மக்கள் குளித்து துணி துவைக்க முறையான படி துறை கட்டி உள்ளனர். குளத்தில் படிகரையில் மிகவும் பிரமண்டமான அன்னசத்திரம் கட்டி உள்ளனர். அந்த காலத்தில் வாகன வசதி இல்லதாதல் அனைவரும் பாதயத்திரையாகவே புலம் பெயர்ந்து உள்ளனர் இவ்வாறு செல்லுபவர்கள் ஆதனக்கோட்டை அன்னசத்திரத்தில் தங்கி உணவு அருந்தி ஒய்வு எடுத்து இந்த குளத்தில் நீராடி சென்றதாக இவ்வூர் மக்கள் கூறுகிறார்கள்.
இந்த குளத்திற்கும், அன்னசத்திரத்திற்கும், சிலப்பதிகாரத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் கூறும் போது காவேரி பூம்பட்டினத்தில் இருந்து கோவலனை தேடி மதுரைக்கு கண்ணகி சென்றபோது, இந்த வழியே சென்றதாகவும் இந்த அன்ன சத்திரத்தில் தங்கி இழைப்பாரி சென்றதாக ஊர் முதியவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு சிறப்பு மிக்க இங்கு உள்ள குளத்தில் தேவையற்ற புதர்கள், வளர்ந்துள்ள தேவையற்ற புல், கருவை, காட்டு செடிகள் மண்டியுள்ளன. எனவே, புதர்களை அகற்றி சுத்தம் செய்து, குள கரையில் அழகிய பிரம்மாண்டமாக உள்ள கல் வேலைபாடுடன் கூடிய அன்னசத்திரத்தை முறையாக ஆய்வு செய்து, சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரி க்கை விடுத்துள்ளனர்.
The post ஆதனக்கோட்டை சத்திரம் குளத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.