“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு!” - திருமாவளவனின் நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பதிவேற்றம்

5 days ago 7

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், அந்த வீடியோ மீண்டும் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோ இணைப்புக்கு மேல், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! - என 1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி" என்று கடந்த செப்.12-ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article