அவிநாசி, பிப்.27: அவிநாசி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையானது இருவழிப்பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி, சாலை விரிவாக்கப் பணிகள், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்டது. இதையடுத்து, தற்போது சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலையின் தரத்தினை, மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கோட்டப் பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) கிருஷ்ணமூர்த்தி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் செங்குட்டுவன் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவிக் கோட்டப்பொறியாளர் லிங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
The post அவிநாசி-மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.