அரியானா பேரவை தேர்தல் கார்கே, சோனியா, ராகுல் காங். நட்சத்திர பிரசாரகர்கள்

6 days ago 6

சண்டிகர்: அரியானா பேரவைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதில், ஆளும் பாஜ 90 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் பேரவை தேர்தலில் 40 பேர் கொண்ட நட்சத்திர பிரசாரகர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது.

அதில்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திர பிரசாரகர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்பட 40 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

The post அரியானா பேரவை தேர்தல் கார்கே, சோனியா, ராகுல் காங். நட்சத்திர பிரசாரகர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article