அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை மன்ற போட்டிகளையும் நடத்த வேண்டும்!

1 week ago 7

பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்குக் கல்வியாண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.

இந்தச் செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்தப் போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவா்களைப் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இதுதொடா்பாக அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்றப் போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை மன்ற போட்டிகளையும் நடத்த வேண்டும்! appeared first on Dinakaran.

Read Entire Article