அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தலைவர்கள் கண்டனம் - ‘ஆட்சியில் உள்ளவர்களிடம் கோரிக்கை வைத்தால் அவமதிப்பு’

6 days ago 6

சென்னை/கோவை: கோவை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்துகேள்வி எழுப்பிய ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரியதாக வெளியான வீடியோ சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இதுதொடர் பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு:

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: ஹோட்டல் உரிமையாளர், நமது அரசுஊழியர்களிடம் எளிமைப்படுத் தப்பட்ட ஜிஎஸ்டி முறையை கோரும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்படும்போது, ​​அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பிரதமர் மோடி. மக்கள் சொல்வதைக் கேட்டு, ஒரே வரி விகிதத்துடன் கூடியஎளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை இந்த அரசு செயல்படுத்தினால், லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினைகள் தீரும்.

Read Entire Article