அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி - இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

2 hours ago 3

டெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள்து. இந்த குவாட் அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குவாட் மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இன்று நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி தற்போது அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.

பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஏராளமான இந்திய வம்சாவளியினர் குவிந்தனர். அவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிய பிரதமர் மோடி, அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி டெலாவேர் செல்ல உள்ளார். இதையடுத்து நாளை நியூயார்க்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை மறுதினம் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்.


Read Entire Article