அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: ரூ.7,616 கோடி முதலீட்டில் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

5 days ago 7

சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ரூ.7,616 கோடி மதிப்பில் 11,516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணம் வெற்றிகரமாகவும், சாதனைக்கு உரியதாகவும் இருந்தது’ என்று பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக.27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ மாகாணங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார்.

Read Entire Article